மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் -நடிகர் கமல்ஹாசன் பேச்சு


மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் -நடிகர் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 15 Sept 2017 9:48 PM IST (Updated: 15 Sept 2017 9:48 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார். அரசியலுக்கு வந்த பின் ரஜினியுடன் பேசத்தயார்.  மாற்றம் தேவை என்று தான் அரசியலுக்கு வருவேன் என கூறினேன்.  எனது வாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை.  அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்துவருகின்றனர். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story