125-வது பிறந்தநாள்: டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


125-வது பிறந்தநாள்: டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Sept 2017 2:50 AM IST (Updated: 16 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை,

சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு ஆதாரமாக இருந்தவரும், நாடார் சமுதாயத்தில் இருந்து முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபைக்கு தேர்வானவருமான பட்டிவீரன்பட்டியை சேர்ந்த டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் 125-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை தியாகராயநகர் பனகல் பூங்கா அருகே உள்ள டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை வாழ் நாடார்கள் சங்கம்

சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமையில் பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து நாடார், பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணைத்தலைவர் கரு சி.சின்னதுரை, செயலாளர் மணலி எஸ்.செல்லதுரை, கல்வி கமிட்டிக்குழு உறுப்பினர் பி.ஜேம்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து சிலைக்கு மரியாதை செலுத்த வந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

குமரி அனந்தன்

‘காந்தி போரம்’ அமைப்பின் நிறுவனரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் எம்.வைகுண்டராஜா, வி.பி.ஐயர் ஆகியோரும், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.முனிஸ்வரன், ஆர்.பாஸ்கர், ரவி, பி.என்.குமார், தளபதி பாலு, அ.தி.மு.க. (அம்மா) அணி செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.டி.ரவிந்திர ஜெயன், தமிழ் மாநில காங்கிரஸ் வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, சினிமா தயாரிப்பாளரும், சண்டை பயிற்சியாளருமான ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு இளைஞர் சங்க தலைவர் எம்.எம்.ஆர்.மதன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

நாடார் சங்கங்கள்

திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.எஸ்.பி.ராஜகோபால் நாடார் தலைமையில் செயலாளர் சி.திருப்புகழ் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து.ரமேஷ் நாடார், தென்னிந்திய நாடார் சங்கம் பொதுச்செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், சென்னை நாடார் சங்கம் தலைவர் கரண்சிங், செயலாளர் விஜயகுமார் ஆகியோரும்,

மீஞ்சூர் வட்டார நாடார் உறவின்முறை தலைவர் எம்.ஏ.திரவியம் நாடார் தலைமையில் துணைத்தலைவர் செல்வம் நாடார், பொருளாளர் ஏ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோரும், அயன்புரம் நாடார் உறவின்முறை சங்கத்தின் தலைவர் டி.பாண்டியராஜன், பொதுச்செயலாளர் வி.ஏ.பிரபாகரன் ஆகியோரும்,

இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் எம்.சவுந்திர பாண்டியன், கே.எஸ்.மலர்மன்னன், எம்.செல்லபாண்டி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார், செயலாளர் கே.சி.ராஜா, பொருளாளர் டி.படேல், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ் ஆகியோரும் டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மரியாதை

டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் மேல்நிலைப்பள்ளி தலைவர் எஸ்.வி.ஏ.பாலசுப்பிரமணியன், தாளாளர் எஸ்.எம்.பாஸ்கர் ஆகியோரும் டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.கே.முத்துசெல்வம், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் பா.இசக்கிமுத்து, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை வி.கே.சி.எம்.செல்வராஜ் நாடார், நாடார் சமுதாய நல சங்க தலைவர் பா.சுபாஷ்நாடார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செந்தில், இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா ஆகியோரும் டபிள்யூ.பி.ஏ.சவுந்திர பாண்டியனாரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

Next Story