முதலமைச்சர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்


முதலமைச்சர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 16 Sept 2017 12:25 PM IST (Updated: 16 Sept 2017 12:25 PM IST)
t-max-icont-min-icon

முதலமைச்சர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.

சென்னை,

அண்ணா பிறந்த நாளயொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனை கடுமையாக தாக்கி பேசினார். மேலும், டிடிவி தினகரன் விரைவில் சிறை செல்வார் என்று விமர்சித்தார். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். டிடிவி தினகரன் கூறியதாவது:-

* பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்து ஒன்றும் நான் சிறை செல்லவில்லை
*என் மீது சுமத்தப்பட்டுள்ள அன்னியசெலாவணி வழக்கு ஊழல் வழக்கு அல்ல.
*நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன்
*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினர் முறை வருபவர்களும் சிறைக்கு சென்றவர்கள்
*உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி

* சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் முதலமைச்சர் பழனிசாமி. 
* முதலமைச்சர் பழனிசாமி தரப்பினர் அனைவரும் விட்டுக்கு செல்வது உறுதி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


Next Story