ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து முற்றிலும் பொய் வெற்றிவேல் எம்.எல்.ஏ
ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து முற்றிலும் பொய் என வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறினார்.
சென்னை
திண்டுக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சசிகலா குடும்பத்தினர் தான், ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என தமிழக மக்கள் பேசுகின்றனர். சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம். ஆனால், நோய் முற்றி இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என விட்டுவிட்டனர். உண்மையை பேசி விடுவார் என்பதற்காக மத்திய மந்திரி அருண்ஜெட்லி, கவர்னர், ராகுல்காந்தி என பலர் வந்தும் யாரையும் பார்க்க விடவில்லை என பேசினார்.
இதற்கு பதில் அளித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ கூறியதாவது:-
தியாகத்திற்காகவே எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவதூறாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினால் அவர் மீது வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா உடல்நிலை குறித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து முற்றிலும் பொய் என கூறினார்.

Related Tags :
Next Story