எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பதி செல்கிறார் குடும்பத்துடன் நாளை சாமி தரிசனம்


எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பதி செல்கிறார் குடும்பத்துடன் நாளை சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 Oct 2017 1:00 AM IST (Updated: 1 Oct 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருமலை–திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடந்து வந்த பிரம்மோற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது.

சென்னை,

திருமலை–திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடந்து வந்த பிரம்மோற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது. இந்த நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சாலை வழியாக புறப்பட்டு செல்கிறார். உடன் முதல்–அமைச்சரின் மனைவி பி.ராதா, மகன் பி.மிதுன் மற்றும் ஜெ.சரண், உறவினர்கள் மாணிக்கம், எம்.சுசீலா மற்றும் முதல்–அமைச்சரின் உதவியாளர் எஸ்.கிரிதரன், பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ், பாதுகாவலர் என்.எஸ்.ரெட்டி, போலீஸ் கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) ஜி.ராமர், துணைகண்காணிப்பாளர் (பாதுகாப்பு) சி.ராஜா ஆகிய 11 பேர் செல்கின்றனர்.

இவர்கள் இன்று இரவு திருமலையில் உள்ள முக்கிய விருந்தினர் தங்கும் விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு பிரேக் தரிசனம் முறையில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பகலில் திருமலையில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.



Next Story