ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி
நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
நாக்பூர்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக முந்தைய ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய பவுலர்கள் உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் கழற்றிவிடப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் திரும்பினர். ஆஸ்திரேலிய அணியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கனே ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பவுல்க்னெர் இடம் பிடித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். எச்சரிக்கையுடன் ஆடிய இவர்கள் முதல் 3 ஓவர்களில் 5 ரன் மட்டுமே எடுத்தனர். அதன் பிறகு ரன்வேட்டையை ஆரம்பித்தனர். இருவரும் பும்ராவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டனர். பும்ராவின் ஒரே ஓவரில் பிஞ்ச், மூன்று பவுண்டரிகளை சாத்தினார். 10 ஓவர்களில் அந்த அணி 60 ரன்களை எட்டியது. நல்ல தொடக்கம் கிடைத்ததால் அந்த அணி 300 ரன்களை தாண்டும் என்றே நினைக்கத்தோன்றியது.
அணியின் ஸ்கோர் 66 ரன்களாக (11.3 ஓவர்) உயர்ந்த போது, அபாயகரமான பேட்ஸ்மேனான ஆரோன் பிஞ்ச் (32 ரன், 36 பந்து, 6 பவுண்டரி), ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். பிஞ்ச் அடித்த பந்து ‘மிட்-ஆப்’ திசையில் நின்ற பும்ரா நோக்கி சென்றது. பும்ரா பந்தை நழுவ விட்டாலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கால்களோடு சேர்த்து பந்தை அமுக்கி பிடித்து கேட்ச் செய்தார்.
அடுத்து டேவிட் வார்னருடன், கேப்டன் ஸ்டீவன் சுமித் இணைந்தார். ஓரளவு நிதானமாக செயல்பட்ட வார்னர் 17-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 19.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்ட போது இந்த ஜோடியை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் பிரித்தார். அவரது பந்து வீச்சில் துல்லியமாக எல்.பி.டபிள்யூ. ஆன ஸ்டீவன் சுமித் 16 ரன்களில்(25 பந்து) வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆட வந்தார். சிறிது நேரத்தில் டேவிட் வார்னரும் (53 ரன், 62 பந்து, 5 பவுண்டரி), ஹேன்ட்ஸ்கோம்ப்பும் (13 ரன்) அக்ஷர் பட்டேலின் சுழலில் சிக்கினர்.
18 ரன் இடைவெளியில் 3 முன்னணி விக்கெட் உருண்டதால் ஆஸ்திரேலியாவின் ரன்வேகம் தடாலடியாக தடம் புரண்டது. உலர்ந்த, வேகம் குறைந்த (ஸ்லோ) இந்த ஆடுகளத்தன்மையை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை வெகுவாக குறைத்தனர்.
5-வது விக்கெட்டுக்கு மார்கஸ் ஸ்டோனிசும், டிராவிஸ் ஹெட்டும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனாலும் ஸ்கோர் மிதமான வேகத்திலேயே நகர்ந்தது. டிராவிஸ் ஹெட் தனது பங்குக்கு 42 ரன்களும் (59 பந்து, 4 பவுண்டரி), ஸ்டோனிஸ் 46 ரன்களும் (63 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.
இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தடுகிதத்தம் இந்த முறையும் எதிரொலித்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ரஹானேவும் சூப்பரான தொடக்கம் தந்தனர். பலவாறு முயற்சித்தும் இந்த கூட்டணியை 22 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய பவுலர்களால் அசைக்க முடியவில்லை.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் (22.3 ஓவர்) சேர்த்து வலுவான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தனர். ரஹானே 61 ரன்களில் (74 பந்து, 7 பவுண்டரி) நாதன் கவுல்டர்-நிலேவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பிரயோஜனம் இல்லை. தொடர்ந்து, கேப்டன் விராட் கோலி நுழைந்தார்.
மறுமுனையில் எதிரணியின் பந்து வீச்சை திறம்பட சமாளித்து அட்டகாசப்படுத்திய துணை கேப்டன் ரோகித் சர்மா, பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது 14-வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் சில சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோகித் சர்மா 125 ரன்களில் (109 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் பந்தை தூக்கி அடித்து கேப்டன் விராட் கோலியும் (39 ரன், 55 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் கேதர் ஜாதவும் (5 ரன்), மனிஷ் பாண்டேவும் (11 ரன்) வெற்றி இலக்கை எட்ட வைத்தனர். இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
சதம் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதையும், ஆல்-ரவுண்டராக ஜொலித்த இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி கண்டது.
அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 7-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.

Related Tags :
Next Story