காந்தியின் 149-வது பிறந்தநாள் காந்தி உருவப் படத்திற்கு கவர்னர், முதலமைச்சர் மரியாதை


காந்தியின்  149-வது பிறந்தநாள்  காந்தி உருவப் படத்திற்கு கவர்னர், முதலமைச்சர் மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2017 11:06 AM IST (Updated: 2 Oct 2017 11:06 AM IST)
t-max-icont-min-icon

காந்தியின் 149-வது பிறந்தநாயொட்டி காந்தி உருவப் படத்திற்கு கவர்னர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்

சென்னை

மகாத்மா காந்தியின் 149 வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் காந்தி சிலைக்கு பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை  முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர் கிரண்பேடி,முதல்வர் நாரயணசாமி,புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி சிலைக்கு நடிகர் சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.

Next Story