கவர்னர் வித்யாசாகர்ராவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
கவர்னர் வித்யாசாகர்ராவுடன் எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்து பேசினர்.
சென்னை,
தமிழகத்துக்கு புதிய முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 6-ந்தேதி பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி ஐகோர்ட்டில் வருகிறது. இந்த நிலையில்தான் கவர்னருடன் சந்திப்பு நடைபெற்று உள்ளது.

Related Tags :
Next Story