இந்தியாவிலேயே தூய்மையான சின்னமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு
இந்தியாவிலேயே தூய்மையான சின்னமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான சின்னங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை அடிப்படையில் சிறந்த சின்னத்துக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதலாவதாக தேர்வாகியுள்ளது.
உலக அதிசயமான தாஜ் மகால், அஜ்மீர் தர்கா, அம்ரித்சர் பொற்கோவில், திருப்பதி கோவில் மற்றும் வைஷ்னவ்தேவி கோவில் உள்ளிட்ட பல முக்கிய சின்னங்களை பின்னுக்குத்தள்ளி மீனாட்சியம்மன் கோவில் முதல் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தூய்மை பணியில் மாவட்ட நிர்வாகமும், மதுரை நகராட்சி நிர்வாகமும் தீவிரமான முயற்சியில் இறங்கி உள்ளது., 60 முழுநேர ஊழியர்களுடன், டிவிஎஸ், இந்தியன் ஆயில், தியாகராஜர் மில்ஸ் போன்ற தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 300 தன்னார்வலர்களும் இணைந்து மாதாந்திர தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து அதற்கான விருதைப் பெறுகின்றனர்.
Related Tags :
Next Story