காந்தியின் எண்ணத்தின்படி, தூய்மை பாரதம் திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் - வித்தியாசகர் ராவ்


காந்தியின் எண்ணத்தின்படி, தூய்மை பாரதம்  திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி  வருகிறார் - வித்தியாசகர் ராவ்
x
தினத்தந்தி 2 Oct 2017 6:24 PM IST (Updated: 2 Oct 2017 6:24 PM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியின் எண்ணத்தின்படி, தூய்மை பாரதம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் என கவர்னர் வித்தியாசகர் ராவ் கூறியுள்ளார்.

சென்னை 

காந்தி ஜெயந்தியையொட்டி காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.  விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கவனர் வித்தியாசகர் ராவ் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் எண்ணத்தின்படி, தூய்மை பாரதம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.  அரசு திட்டங்களை தீட்டினாலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மையே சேவை திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. என கூறினார்.

நிக்ழ்ச்சியில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசு காந்தி வழியில் நடப்பதால்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.நாட்டின் ஆத்மா கிராமங்களில்தான் இருக்கிறது என்றவர் காந்தி. என கூறினார்.

Next Story