முன்னாள் மாணவர்கள் சங்க மாநாடு லயோலா கல்லூரியின் முன்னாள் நிர்வாகிகளுக்கு விருது
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க மாநாட்டில் முன்னாள் நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை,
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் ஷியாம் கோத்தாரி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது. டோகா வங்கியின் முதன்மை செயல் அதிகாரி சீதாராமன் உள்பட பலர் பேசினார்கள்.
லயோலா கல்லூரி விடுதி மாணவர்கள் சாப்பிட்ட பிறகு மீதமாகும் சாப்பாட்டை சமையல் எரிவாயு (கியாஸ்) ஆக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எம்.சாமிநாதன், தொழில் அதிபர் மனோ செல்வநாதன், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் வி.ராமகிருஷ்ணன், ஓட்டல் துறை பாலச்சந்திரன், ரோட்டரி தலைவர் கே.ஆர்.ரவீந்திரன் ஆகியோரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
லயோலா கல்லுரி முன்னாள் நிர்வாகிகளான முன்னாள் ரெக்டர்கள், முன்னாள் செயலாளர்கள், முன்னாள் முதல்வர்கள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
லியோ ஜார்ஜ், ஜேம்ஸ் ராடு ரிகியூஸ், என்.கேசிமிர் ராஜ், ஏ.ஜே.தம்புராஜ், வி.ஜோசப்சேவியர், எஸ்.இக்னை முத்து, எஸ்.பீட்டர் சேவியர், பிரான்சிஸ் எம்.பீட்டர், எஸ்.சேவியர் அல்போன்ஸ், போனிபேஸ் ஜெயராஜ், எம்.ஆல்பர்ட் வில்லியம், கே.அமல், ஜி.ஜோசப் அந்தோணி சாமி, ஆண்ட்ரூ, சி.ஜோ அருண், பிரான்சிஸ் வாழபில்லி, ஏ.ஆல்பர்ட் முத்துமாலை, ஜான் லூர்து, எல்.எக்ஸ்.ஜெரோம் ஆகிய அடிகளார் ஆகியோர் விருது பெற்றனர்.
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் பேசுகையில்; “நான் இந்த லயோலா கல்லூரியில் விடுதியில் தங்கி 4 வருடம் படித்தேன். நான் ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். அதுதான் நான் இந்த அளவுக்கு முன்னேற காரணமாக அமைந்தது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகம் 4 இடங்களில் உள்ளது. 35 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். எல்லா புகழும் லயோலா கல்லூரிக்குத்தான். எனது வெற்றிக்கு காரணம் லயோலா கல்லூரிதான்” என்று கூறினார்.
விழாவில் ஆராய்ச்சி மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் லயோலா கல்லூரியின் ரெக்டர் ஜெயபதி பிரான்சிஸ் அடிகளார், செயலாளர் லாசர் அடிகளார், முதல்வர் ம.ஆரோக்கியசாமி, முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனர் தாமஸ் அடிகளார், செயலாளர் பாலமுருகன், இணை முதல்வர் பாத்திமாவசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story