டெங்கு காய்ச்சல்: 6 மாத கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
ராசிபுரம் அருகே 6 மாத கைக்குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேளூக் குறிச்சி காமாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெரியசாமி முடிதிருத்தும் தொழிலாளி.
இவரது மனைவி அன்பு கொடி (வயது 28). இவர் களுக்கு சர்மிளாஸ்ரீ (9), சர்வீன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சர்வீ னுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனை உடனே சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது சர்வீனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சர்வீனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் நேற்று இரவு வீடு திரும்பினார்.
திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகு பிறந்த முதல் ஆண்குழந்தை சர்வீனுக்கு தற்போது டெங்கு காய்ச்சல் இருப்பதால் தாய் அன்புக் கொடி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து தனது கைக் குழந்தை தூக்கி கொண்டு அன்புகொடி வெளியே வந்தார்.
பின்னர் அவர் பேளூக் குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில் கைக்குழந்தையுடன் குதித்தார். 2 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் குழந்தையும், அன்புக்கொடியும் பிணமாக மிதப்பதை கண்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் சம்வ இடத்துக்கு வந்து அன்பு கொடி, குழந்தையின் உடலை கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து உறவினர் கள் பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்பதற்காக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்த உடல்களை மீட்டனர். பின்னர் அந்த உடல்களை போலீசார் கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story