22–ம் ஆண்டு நினைவு தினம்: ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சிலம்பு செல்வர் என்று அழைக்கப்படுபவருமான ம.பொ.சிவஞானம்(ம.பொ.சி.) 1995–ம் ஆண்டு அக்டோபர் 3–ந் தேதி இறந்தார்.
சென்னை,
ம.பொ.சி. 22–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள ம.பொ.சி.யின் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு பா.ஜனதா எம்.பி. இல.கணேசன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
அவர்களுடன், ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story