சசிகலா இருக்கும் இடமே உண்மையான அதிமுக திவாகரன் பேட்டி
சசிகலா இருக்கும் இடமே உண்மையான அதிமுக என திவாகரன் கூறிஉள்ளார்.
சென்னை,
சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாவை கண்டிப்பாக பரோலில் அழைத்து வருவோம். சசிகலா பரோல் தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்வோம். சசிகலா இருக்கும் இடமே உண்மையான அதிமுக. நடராஜனுக்கு உறுப்பு தானம் பெறுவதிலேயே எங்களுக்கு பல இடையூறுகள் இருந்தன என கூறிஉள்ளார். முதல்-அமைச்சரை மாற்றத்தான் ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர் என்பது உலகிற்கே தெரியும். ஆட்சியை கலைக்க 18 எம்.எல்.ஏக்கள் முயற்சித்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மட்டுமே கட்சி என யாரும் நினைக்க வேண்டாம். அவர்கள் மட்டுமே கட்சியில்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story