மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது: முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
கரூர்,
கரூரில் நடந்து வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசும்பொழுது, ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஒன்றும் செய்துவிட முடியாது.
செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்பதை புரிய வைத்து விட்டார். கரூர் மாவட்டத்திற்கு அவப்பெயரை அவர் ஏற்படுத்தி விட்டார் என கூறுகின்றனர்
அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற இரவு, பகலாக பாடுபட்டோம். அவர் செய்துள்ள துரோகம் எப்பொழுதும் மறையாது.
எங்கள் அனுபவம்தான் செந்தில் பாலாஜியின் வயது. சலசலப்பு, சூழ்ச்சி, துரோகத்தினால் ஆட்சியை வீழ்த்த முடியாது. மக்கள், தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என பேசியுள்ளார்.
Related Tags :
Next Story