காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால் (வயது 46) , இவர் மீது, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஸ்ரீதர், போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கம்போடியாவில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரது மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமான ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் சில மாதங்களுக்கு முன்னர் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story