சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏன்? திவாகரன் பேட்டி
சசிகலாவிற்கு பரோல் தொடர்பாக தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ம.நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அவரை சந்திக்க வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:–
ம.நடராஜனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்.
சசிகலாவிற்கு பரோல் தொடர்பாக தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது. பரோல் தொடர்பாக மருத்துவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் முக்கியமான சில ஆவண குறிப்புகளை யாரோ எடுத்து விடுகின்றனர். இதனால் பரோல் காலதாமதம் ஆகிறது. எனவே பரோல் பெறுவதற்காக கோர்ட்டில் ரிட்மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளோம். ம.நடராஜனுக்கு உடல் உறுப்பு தானம் பெறுவதிலும் கூட சிலர் பல தடைகளை ஏற்படுத்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story