தமிழ்நாட்டில் ‘இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும்’ இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை ஆகும். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடியும் தருவாயில் உள்ளதால், அடுத்ததாக வரும் வடகிழக்கு பருவமழையை தமிழகம் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கிறது.
அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் எந்த அளவு மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2017-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை (அக்டோபர்-டிசம்பர்) தென் தீபகற்ப இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ராயலசீமா, கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இயல்பான அளவில் இருக்கும். அதாவது வடகிழக்கு பருவமழை மேற்சொன்ன பகுதிகளில் 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை தென்மேற்கு பருவமழை காலம் முடியவில்லை என்றும், தெலுங்கானா பகுதியில் நிலைக்கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அந்த மேலடுக்கு சுழற்சி தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து தெலுங்கானா பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் மழைக்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story