இரட்டை இலை: கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தினகரன் மனு தள்ளுபடி
இரட்டை இலைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தினகரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை,
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக வரும் 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி டிடிவி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட், தினகரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு டிடிவி தினகரன் தரப்புக்கு மதுரை ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story