அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் பதவி ஏற்றபின் கவர்னர் பேட்டி


அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் பதவி ஏற்றபின் கவர்னர் பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2017 11:13 AM IST (Updated: 6 Oct 2017 11:13 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் என பதவி ஏற்றபின் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்தார்.

பதவி ஏற்ற பிறகு கவர்னர் பன்வாரிலால் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கவர்னராக பதவி ஏற்ற எனக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்பது எனது முதல் கடமையாகும். அரசியல் அமைப்பு சட்டத் திற்கு உட்பட்டு செயல் படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல் சார்பின்றி செயல்படுவேன். நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படைத்தன்மை உறுதிபடுத்த வேண்டும். தமிழக அரசின் நிர்வாகம் தெளிவாக செயல்பட உறுதி செய்வேன். தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்து அரசுக்கு எனது ஆதரவு  இருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் என்னால் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story