சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படும் என அரசு பயந்து நிபந்தனைகளை விதித்துள்ளது-தங்க தமிழ்செல்வன்
சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தமிழக அரசு பயந்து கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:
சசிகலாவுக்கு கர்நாடக அரசு 3 நிபந்தனைகளை மட்டுமே விதித்தது. தமிழக அரசு 4 நிபந்தனை விதித்ததால், சசிகலாவுக்கு பரோல் தாமதமானது. சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தமிழக அரசு பயந்து கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகள் தேவையற்றது. பரோல் நிபந்தனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேவையற்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளதாக உணர்கிறோம்.
சசிகலா, தினகரனின் நல்லெண்ணத்திற்கு சோதனையில் இருந்து விடுபடுவோம். தமிழக காவல்துறையின் தாமதம் காரணமாக பரோல் கிடைக்க 4 நாட்கள் தாமதமாகியுள்ளது. சசிகலாவை பார்க்க எங்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story