போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கும் எண்ணம் சசிகலாவுக்கு இல்லை -டிடிவி தினகரன்


போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கும் எண்ணம் சசிகலாவுக்கு இல்லை -டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 6 Oct 2017 11:01 PM IST (Updated: 6 Oct 2017 11:02 PM IST)
t-max-icont-min-icon

பரோலில் விடுவிக்கப்பட்ட அதிமுக(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கும் எண்ணம் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

பரோலில் விடுவிக்கப்பட்ட அதிமுக(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா சென்னை தியாகராயநகர் வந்து சேர்ந்தார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய டிடிவி தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:

போதுமான ஆவணங்கள் அளித்தும் காலம் தாழ்த்தப்பட்டு சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கும் எண்ணம் சசிகலாவுக்கு இல்லை. போயஸ் கார்டனில் தங்கி விடுவாரோ என்று நினைத்து கடும் நிபந்தனைகள விதிக்கப்பட்டுள்ளன. போயஸ் கார்டனில் கூட சசிகலா தங்கிக்கொள்ளாலாம் என சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது.  பார்வையாளர்களை சசிகலா சந்தித்தால் எப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்?  என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு விதித்த நிபந்தனைகளால் 5 நாட்கள் மட்டுமே பரோல் கிடைத்தது. போதுமான ஆவணங்கள் அளித்தும் காலம் தாழ்த்தப்பட்டு சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது. சசிகலாவை உறவினர்கள் அழைத்து செல்லலாம் என சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி தந்தனர்.
சசிகலா தங்குமிடம் குறித்து சிறை அதிகாரிகள் கேட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story