கவர்னர் பதவி ஏற்பு விழாவில் நெறிமுறைகள் மீறப்பட்டன மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கவர்னர் பதவியேற்பு விழாவில் நெறிமுறைகள் மீறப்பட்டன என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் தி.மு.க. எதை எதிர்ப்பார்க்கிறது?.
பதில்:- சட்டம் - ஒழுங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பாதுகாப்பேன், எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாத வகையில் என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்று அவரே கூறியிருக்கிறார். அதைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் செய்த தவறை, இவர் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம்.
கேள்வி:- கவர்னர் பதவியேற்பு விழாவில் ‘ப்ரோடோகால்’ (நெறிமுறைகள்) முறையாக பின்பற்றப்படவில்லையா, என்ன நடந்தது?.
பதில்:- கவர்னர் பதவியேற்றுக் கொண்ட பிறகு முதல்-அமைச்சர் அவருக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் வாழ்த்துத் தெரிவித்தார்கள். அமைச்சர்களுக்குப் பிறகு, ஆளுங்கட்சியை சேர்ந்த அரசு கொறடாவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
நியாயமாக, அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் ‘ப்ரோட்டோகால்’.
அதன்படி, கவர்னருக்கு வாழ்த்துச் சொல்ல நான் சென்றபோது, அங்கிருந்த அதிகாரி ஒருவர், நீங்கள் இப்போது செல்லக் கூடாது, நீதிபதிகள் வாழ்த்துச் சொன்னப் பிறகுதான் வர வேண்டும் என்றார்.
அதற்கு நான் சொன்னேன், “அப்படியென்றால், நீதிபதிகள் வாழ்த்துச் சொன்னப் பிறகுதானே அமைச்சர்கள் வாழ்த்துச் சொல்லியிருக்க வேண்டும். அதுதானே ‘ப்ரோட்டோகால்’ அதுதானே முறை”, என்றேன். “அந்த ‘ப்ரோட்டோகால்’ இங்கு மீறப்பட்டிருக்கிறது. அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவருக்குதான் அந்த ‘ப்ரோட்டோகால்’ இருக்கிறது” என்று நான் வாதிட்டேன்.
அதற்குப் பிறகு வேறுவழியில்லாமல் என்னை அனுமதித்தார்கள். நானும் வாழ்த்திவிட்டு வந்திருக்கிறேன்.
கேள்வி:- ‘வாக்கி-டாக்கி’ ஊழல் குறித்து கவர்னரை நேரில் சந்தித்து முறையிடுவீர்களா?.
பதில்:- அதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அந்த அறிக்கைக்கு என்ன ‘ரியாக்ஷன்’ இருக்கிறது என்று பார்ப்போம். பார்த்துவிட்டு, தேவையென்றால் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைகள் குறித்து முறையிடுவோம்.
கேள்வி:- சசிகலாவின் கணவருக்கு ஒரு இளைஞரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது குறித்து சிலர் சர்ச்சைகளை எழுப்பி வருகிறார்களே?.
பதில்:- உறுப்பு தானம் செய்த இளைஞரின் குடும்பத்தினரே, இதனை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று வேதனையோடு கூறியிருக்கிறார்கள். எனவே, அதுகுறித்து நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :
Next Story