ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–(அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி)
கவிதா ராமு – அருங்காட்சியகங்கள் இயக்குனர் – (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்).
டி.அன்பழகன் – ஆவணக் காப்பக இயக்குனர் – (எல்காட் பொது மேலாளர்).
எஸ்.சிவராசு – கோயம்புத்தூர் வணிக வரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர் – (திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்).
எஸ்.பி.அம்ரித் – மதுரை டி.ஆர்.டி.ஏ. திட்ட அதிகாரி/ கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) – (கோவை வணிகவரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர்).
பி.உமா மகேஸ்வரி – தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனர் – (தமிழ்நாடு மருந்து சேவைகள் கழக பொது மேலாளர்).பி. ஸ்ரீவெங்கட பிரியா – சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனர் – (கோவை தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் மூத்த மண்டல மேலாளர்).
ஆர்.சீதாலட்சுமி – ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் – (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணை மேலாண்மை இயக்குனர்).
எஸ்.பி.கார்த்திகா – சர்க்கரை கூடுதல் இயக்குனர் – (சென்னை மதுவிலக்கு மற்றும் கலால்வரி இணை கமிஷனர்–1).
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் – மறுவாழ்வு இயக்குனர் – (முதல்–அமைச்சர் அலுவலக இணைச் செயலாளர்).
எஸ்.வளர்மதி – கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை செயலாளர் – (மாற்றுத்திறனாளிகள் நலன் இணை கமிஷனர்).
கே.பேச்சியம்மாள் – சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை துணை செயலாளர் – (எழுதுபொருள் அச்சு இணை இயக்குனர்).பி.மணிமாறன் – கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை துணைச் செயலாளர் – (தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் மூத்த மண்டல மேலாளர்).
ஆர்.நந்தகோபால் – தொழிலாளர்கள் இணை கமிஷனர் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின் அலுவல் சாரா இணை செயலாளர் – (கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணைச் செயலாளர்).
டி.மோகன் – கவர்னரின் துணைச் செயலாளர் – (கவர்னரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்).
கே.பாலசுப்பிரமணியம் – தொழில்துறை துணைச் செயலாளர் – (சிட்கோ பொது மேலாளர்).
கே.வி.முரளிதரன் – கவர்னரின் துணைச் செயலாளர் – (கவர்னரின் துணைச் செயலாளர் கவர்னர் இல்ல செலவுக் கட்டுப்பாட்டாளர்).
கலைச்செல்வி மோகன் – நகராட்சி நிர்வாக இணை கமிஷனர் – (மதுவிலக்கு மற்றும் கலால்வரி இணைக் கமிஷனர்–2).
வி.ராஜாராமன் – மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத் தலைவர் – (நகராட்சி நிர்வாக இணை கமிஷனர்).
பி.ரமண சரஸ்வதி – மின்னாளுமை முகமை இணை இயக்குனர் – (தமிழ்நாடு அரசு கேபிள்டிவி கழக பொது மேலாளர் (நிர்வாகம்).ஜெ.விஜயராணி – நில நிர்வாக இணைக் கமிஷனர் – (நில நிர்வாக கமிஷனர் அலுவலக இணை கமிஷனர் (எல்.ஏ.).
பி.பிரபாகர் – போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் – (சென்னை நெடுஞ்சாலைகள் மாவட்ட வருவாய் அதிகாரி (நில ஆர்ஜிதம்).
ஏ.ஜான் லூயிஸ் – தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் – (முதல்–அமைச்சர் அலுவலக துணைச் செயலாளர்).
எஸ்.அமிர்த ஜோதி – தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் – (தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்).
ஏ.சண்முகசுந்தரம் – அண்ணா மேலாண்மை நிறுவன கூடுதல் இயக்குனர் – (பெருநகர சென்னை மாநகராட்சி 14–வது மண்டல அதிகாரி).
மகேஸ்வரி ரவிகுமார் – பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி)– (சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி (முத்திரை).
எஸ்.நடராஜன் – தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரி – (போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.