அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா செல்லூர் ராஜூ சொல்கிறார்

அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்து உள்ளார்.
மதுரை,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள கணவர் நடராஜனை பார்க்க, கடும் நிபந்தனைகளுடன் 5 நாட்கள் ‘பரோல்’ பெற்று சென்னை வந்து உள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு சசிகலாதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்து உள்ளார்.
மதுரையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலாதான், இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் இருந்தாலும், தற்போது வெளிப்படுத்த முடியாமல் அனைத்தையும் அடக்கி கொண்டுள்ளேன் என கூறிஉள்ளார். அதிமுக ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா என்றும் குறிப்பிட்டு உள்ளார் செல்லூர் ராஜூ.
முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் நடவடிக்கைக்கு என்னுடைய கருத்து பாதகமாக இருக்க கூடாது. வேகமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த சுனாமி வேகத்தில் அரசு பணியாற்றி வருகிறது. திமுக டெங்குவை விட மோசமானது, ஐந்து முறை ஆட்சி செய்து திமுக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எனவும் பேசிஉள்ளார் செல்லூர் ராஜூ.
Related Tags :
Next Story