நான் ஸ்லீப்பர் செல் இல்லை கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ


நான் ஸ்லீப்பர் செல் இல்லை கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 9 Oct 2017 11:08 AM IST (Updated: 9 Oct 2017 11:14 AM IST)
t-max-icont-min-icon

நான் ஸ்லீப்பர் செல் இல்லை என கண்கலங்கியபடி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்

சென்னை

மதுரையில் தனியார் சார்பில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்னர் நிருபர்களிடம் கூறும் போது:-

என்னை பொறுத்தவரை, ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு சசிகலா பாடுபட்டு இருக்கிறார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அந்த கருத்தை மாற்றிக்கொள்பவனும் நான் இல்லை. இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் எடுக்கின்ற நடவடிக்கைக்கு என்னுடைய கருத்துகள் பாதகமாக எந்த வகையிலும் இருக்கக்கூடாது என கூறினார்.

இந்த நிலையில்  தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது :-

அமைச்சர் செல்லூர்ராஜூ மிக தெளிவாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். எனக்கும் மனசாட்சி இருக்கிறது. என் மனசுக்குள்ளும் சில வி‌ஷயங்கள் இருக்கிறது. ஆனால் பேச முடியாத நிலைமையில் இருக்கிறேன். இந்த அரசு (அ.தி.மு.க. ஆட்சி) உருவாவதற்கு சசிகலா தான் காரணம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று அமைச்சர் செல்லூர்ராஜூ மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை தான் நாங்கள் சொன்னோம், அங்கு (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி) இருக்கிற ஸ்லீப்பர்செல் ஒவ்வொருவராக வராங்க.என கூறினார்.


இன்று பேட்டி அளித்த  அமைச்சர் செல்லூர் ராஜு நான் ஸ்லீப்பர் செல் இல்லை என  கண்கலங்கிய படி கூறினார்.

அவர்  கூறியதாவது:-

சசிகலா குறித்து என் மனசாட்சிப்படி பேசினேன் . அது  பெரிதாக்கப்பட்டு விட்டது. நான் ஸ்லீப்பர் செல் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

Next Story