காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி


காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி
x
தினத்தந்தி 10 Oct 2017 3:58 PM IST (Updated: 10 Oct 2017 3:57 PM IST)
t-max-icont-min-icon

ஏடிஎம் கார்ட் லாக் ஆனதால் காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி

சென்னை

காஞ்சிபுரம், குமரக்கோட்டம் கோயில் வாசலில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏ.இவாஞ்சலின் (24) என்ற இந்த நபர் அசலான பாஸ்போர்ட், விசா என்று சட்டபூர்வமான ஆவணங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. செப் 24-ம் தேதி இந்தியா வந்துள்ளார் இவர்.

செவ்வாய் காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சில கோயில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோயிலுக்கு அருகில் உள்ள ஏடிஎம். இல் பணம் எடுக்கச் சென்றார்.

அவரது PIN நம்பர் லாக் ஆகிவிட பணம் எடுக்க முடியாமல் தவித்தார். இதனால் செய்வதறியாது வெறுப்படைந்த அவர் கோயில் வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைப் பெற்ற போலீஸார் உடனடியாக வந்து இவாஞ்சலினை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்தனர். அதன் பிறகு அவருக்குப் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story