வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2017 9:42 PM IST (Updated: 11 Oct 2017 4:47 AM IST)
t-max-icont-min-icon

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, 

‘‘வெப்பச்சலனம் காரணமாக நாளை (புதன்கிழமை) தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு மழை பெய்யும்’’ என்றனர்.



Next Story