டெங்கு பாதிப்புகள் குறித்து 5 மருத்துவர்கள் கொண்ட வல்லுநர் குழு நாளை ஆய்வு செய்கிறது
தமிழகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்து 5 மருத்துவர்களை கொண்ட வல்லுநர் குழு நாளை ஆய்வு செய்கிறது.
சென்னை,
நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் அரசு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் பேசுகையில், டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மத்திய குழு வர இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் மருத்துவ குழுவை தமிழகத்துக்கு அனுப்பி என்னென்ன தேவை என்பதை கண்டறிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக பிரதமர் என்னிடம் கூறினார் என கூறினார் பன்னீர்செல்வம்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்து 5 மருத்துவர்களை கொண்ட வல்லுநர் குழு நாளை ஆய்வு செய்கிறது. இன்று சென்னை வரும் மத்திய குழு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத் துறை செயலாளர் சிகே மிஸ்ரா பேசுகையில், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நிலவும் நிலையை ஆய்வு செய்யவும், நிலையை எதிர்க்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யவும் மாநில அரசுக்கு உதவி செய்ய டாக்டர்கள் குழு அனுப்பட்டு உள்ளது, ” என கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story