ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்க தயார் மு.க.ஸ்டாலின் பேட்டி
ஆர்.கே.நகர் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- டெங்கு குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மத்தியக்குழு வந்திருக்கிறதே?
பதில்:- டெங்குவை கட்டுப்படுத்த மத்தியக்குழு வந்திருப்பதை உள்ளபடியே வரவேற்கிறோம். அதேநேரத்தில், மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக்குழு வந்திருந்தது. ஆனால், நடந்தது என்ன என்ற உண்மையை அந்தக்குழு நாட்டு மக்களுக்கு இதுவரை வெளிப்படுத்தவில்லை. எனவே, டெல்லியில் இருந்து வந்துள்ள குழு டெங்கு குறித்த உண்மையான விவரங்களை எடுத்துச்சொல்ல வேண்டும், டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
கேள்வி:- உள்ளாட்சித் தேர்தலுக்கும், டெங்கு பரவுவதற்கும் எந்த தொடர்புமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவர் எப்போதுமே முன்பின் சம்பந்தமே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பவர். முதலில் தர்மயுத்தம் நடத்தி, அதன் பிறகு பதவி யுத்தம் நடத்தி, அதன் பிறகு பஞ்சாயத்து நடத்தி, அந்தப் பஞ்சாயத்தில் வெற்றிபெற்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதற்காக டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார். மின்துறை அமைச்சரை தவிர்த்துவிட்டு, தன்னுடைய அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோரை உடன் அழைத்துச் சென்று பிரதமரிடம் பேசியிருக்கிறார்.
கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தே.மு.தி.க. அந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கிறதே?
பதில்:- அவருடைய கொள்கையில் நான் குறுக்கிட விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரையில் எந்த நேரத்திலும், ஏன் நாளைய தினமே ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட காரணம் என்ன? 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை வருமான வரித்துறையே கண்டுபிடித்து, அதனால் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்திவைத்த விவரம் நாட்டுக்கே நன்றாக தெரியும்.
அந்த சோதனையின்போது, 89 கோடி ரூபாய் வினியோகம் செய்தவர்களின் பட்டியலில் முதல் பெயர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று வருமான வரித்துறையே பரிந்துரை செய்தும், இதுவரையிலும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவரேதான் இப்போதும் முதல்- அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, அந்த வழக்கில் உரிய நடவடிக்கையை முதலில் எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
கேள்வி:- டெங்குவினால் இறந்தவர்களின் பட்டியலை எதிர்க்கட்சி தலைவர் வெளியிட தயாரா என்று அமைச்சர் சரோஜா கேட்டிருக்கிறாரே?
பதில்:- சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா டெங்கு காய்ச்சலே கிடையாது, ராசிபுரத்தில் இறந்த 11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை, சாதாரண காய்ச்சலால் இறந்தது என்று சொல்லியிருக்கிறார். என்னிடத்தில் உரிய ஆதாரம் இருக் கிறது. சேலத்தில் உள்ள ஸ்ரீகோகுலம் என்ற மருத்துவமனையில் சிபி சக்கரவர்த்தி என்பவரின் 11 மாத குழந்தை சிஜ்ஜோ சிலி டெங்கு காய்ச்சலால் இறந்ததாக இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்கள். இந்த ஆதாரம் அமைச்சருக்கு போதுமானதா? அல்லது அவர் கொஞ்சம் காலஅவகாசம் கொடுத்தால், எந்தெந்த மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள, நானே அவரை நேரில் அழைத்துச் சென்று காட்டவும் தயாராக இருக்கிறேன். அவர் வருவதற்கு தயாரா?
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Tags :
Next Story