‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிக்க கூடாது தியேட்டர்களுக்கு பட அதிபர்கள் சங்கம் திடீர் கட்டுப்பாடுகள்
தியேட்டர்களில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் வற்புறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 1169 திரையரங்குகள் உள்ளன. நகரபகுதி வணிக வளாகங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இயங்குகின்றன. தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும்போது அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு ரூ.500, ரூ.1000 என்று ‘பிளாக்’கில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தியேட்டர்களில் உள்ள கேண்டீனில் உணவு பண்டங்கள் வெளியில் விற்பதை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பார்க்கிங் கட்டணமும் அதிகமாக உள்ளது.
மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று ரூ.120-க்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்து விட்டு திரும்பும் ஒருவர் பார்க்கிங் கட்டணமாகவும் ரூ.120 கொடுக்க வேண்டி உள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பதற்கும் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வந்தது.
அரசு தற்போது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
*தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை மட்டுமே இன்று (நேற்று) முதல் வசூலிக்க வேண்டும். அதனை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்று மக்கள் எந்த விதத்திலும் பாதிப்பு அடையக்கூடாது.
* அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் உடனடியாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்.
* விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகள் பற்றி பொதுமக்கள் அறிந்தால் உடனே புகார் செய்யலாம்.
* கேண்டீனில் அதிகபட்ச சில்லரை விலைக்குத்தான் உணவு பண்டங்களை விற்க வேண்டும்.
* ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிக்க கூடாது.
* அம்மா தண்ணீர் பாட்டில் தான் விற்கப்பட வேண்டும்.
* பாட்டில்களில் தண்ணீர் கொண்டுவர மக்களை அனுமதிக்க வேண்டும்.
* விரைவில் ஆன்லைன் கட்டணம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் விஷால் கூறியுள்ளார்.
விஷால் அறிவிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். திருட்டு வி.சி.டி.யை ஒழித்து தியேட்டர்களுக்கு மக்களை பெருமளவில் வரவைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக விஷால் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Tags :
Next Story