‘தமிழ்நாட்டின் பிச்சை எடுக்கும் கலாசாரம் பிடித்துள்ளது’ரஷிய சுற்றுலா பயணி கருத்து
காஞ்சீபுரத்தில் உள்ள கோவில் முன்பு ரஷியாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஈவ்ஜெனீ பெட்னி கோவ் பிச்சை எடுத்தார்.
சென்னை
வெளிநாட்டுக்காரர் ஒருவர் பிச்சை எடுக்கும் தகவல் அறிந்து போலீசார், அவரிடம் விசாரித்த போது, பண நெருக்கடியால் பிச்சை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி செலவுக்கு பண உதவியும் செய்தனர்.
இந்த தகவல் அறிந்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் ஈவ்ஜெனீ பெட்னி கோவ் தனக்கு தமிழ்நாட்டின் பிச்சை எடுக்கும் கலாசாரம் பிடித்திருப்பதாகவும், இதனால் நான் தொடர்ந்து பிச்சை எடுப்பேன் என்றும் பிடிவாதம் பிடித்துள்ளார்.
நேற்று சென்னை தியாகராயநகர் பகுதியில் வலம் வந்து பிச்சை எடுத்தார். இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களிடம், அவர் பிச்சை கேட்டார்.
பிச்சை போட்டால் தான் பேட்டி தருவேன் என்றும் பிடிவாதமாக அவர் கூறினார். மாம்பலம் போலீசாரும் வந்து அவருக்கு அறிவுரை கூறி ரஷிய தூதரகத்தை அணுகுமாறு கூறினர்.
சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ள அவருடைய விசா வருகிற 22-ந் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story