டெல்லியில் ராகுல்காந்தியுடன் சு.திருநாவுக்கரசர் சந்திப்பு


டெல்லியில் ராகுல்காந்தியுடன் சு.திருநாவுக்கரசர் சந்திப்பு
x
தினத்தந்தி 14 Oct 2017 8:03 PM IST (Updated: 14 Oct 2017 8:03 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ராகுல்காந்தியுடன் சு.திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

சோனியா காந்தியின் ஆசியோடு விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் மற்றும் தமிழக காங்கிரஸ் நிலவரங்கள் குறித்தும் ராகுல்காந்தியிடம் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story