தீபாவளி நாளில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தீபாவளி நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
சென்னை,
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தீபாவளி நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதிக்குள் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்பட மாவட்டங்களில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது.
சென்னை நகரில் காலையில் இருந்தே சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து, மேகமூட்டத்துடன் ரம்மியமான வானிலையும் நிலவியது.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்(இன்று) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். தீபாவளி நாளான 18-ந்தேதி லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று அவரிடம் கேட்டதற்கு, ‘ இன்னும் தென்கிழக்கு பருவமழையே நிறைவடையவில்லை. எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை தற்போது கூற முடியாது.’ என்று கூறினார். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், கும்மிடிப்பூண்டியில் தலா 3 செ.மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Related Tags :
Next Story