பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு செய்வதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை திருநாவுக்கரசர் பேட்டி
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு செய்வதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் 22 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கவேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதனை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். பஞ்சாப் மற்றும் கேரளாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் மோடிக்கு எதிரான மக்களின் மனநிலையை காட்டுகிறது.
மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார். அவர் பொறுப்பு ஏற்ற உடன் தமிழகத்துக்கு முதலாவதாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ராகுல் காந்தியும் தமிழகத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
தார் கொள்முதல் செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த துறை முதல்-அமைச்சரிடம் உள்ளது. எனவே சி.பி.ஐ. அல்லது உயர்மட்டக்குழு விசாரிக்கவேண்டும்.
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு செய்வதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு பரோல் நீட்டிப்பு வழங்கினால், மற்ற குற்றவாளிகளுக்கு இதுவே முன் உதாரணமாக அமைந்துவிடும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணம்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கட்சியின் மாநில தலைவராக நான் நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல் காந்தியும் தான் முடிவு எடுக்கவேண்டும். எனக்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் இடையே மனக்கசப்பு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story