கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 2 தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை-போக்குவரத்துத் துறை அமைச்சர்
கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இன்று 2 தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் கோயம்பேட்டில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:
கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இன்று 2 தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story