தீபாவளியையொட்டி சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் அரசு அனுமதி


தீபாவளியையொட்டி சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் அரசு அனுமதி
x
தினத்தந்தி 18 Oct 2017 1:05 AM IST (Updated: 18 Oct 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி, சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி, சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி, நாளை (19-ந் தேதி), 20-10-2017, 23-10-2017, 24-10-2017 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5-வது காட்சி நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், தீபாவளி நாளான 18-ந் தேதி, 21-ந் தேதி, 22-ந் தேதி ஆகிய தேதிகள் அரசு விடுமுறையானதால், ஏற்கனவே உள்ள அரசாணையின்படி, அன்றைய தேதிகளிலும் காலை 9 மணிக்கு அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக் கொள்ளலாம். அதாவது 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story