சென்னை-கொல்லம் இடையே சுவிதா சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை-கொல்லம் இடையே சுவிதா சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 9:15 PM GMT (Updated: 17 Oct 2017 8:08 PM GMT)

சபரிமலை யாத்திரை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை-கொல்லம் இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கொல்லம் சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06041), அடுத்த மாதம் 13-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி வரை அனைத்து திங்கள் மற்றும் புதன்கிழமையும் மாலை 6.20 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06042), அடுத்த மாதம் 14-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை அனைத்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும் மாலை 4.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (82640), வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி மாலை 4.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வந்தடையும்.

சென்னை சென்டிரல்-கொல்லம் சிறப்பு ரெயில் (82635), அடுத்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை அனைத்து வெள்ளிக்கிழமையும் இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (82636), அடுத்த மாதம் 19-ந்தேதியில் இருந்து வரும் டிசம்பர் மாதம் 17-ந்தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7, 21-ந்தேதி மதியம் 3.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு வந்தடையும்.

கொல்லம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06044), வரும் டிசம்பர் மாதம் 24, 31 மற்றும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதியும் மதியம் 3.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story