விஜயின் மெர்சல் பட பேனர் வைத்தபோது சுவர் இடிந்து சிறுவன் பலி


விஜயின் மெர்சல் பட  பேனர் வைத்தபோது சுவர் இடிந்து சிறுவன் பலி
x
தினத்தந்தி 18 Oct 2017 9:02 AM IST (Updated: 18 Oct 2017 9:02 AM IST)
t-max-icont-min-icon

விஜயின் மெர்சல் பட பேனர் வைத்தபோது சுவர் இடிந்து விஜய் ரசிகரான சிறுவன் பலியானான்


காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேரு நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் யோகேஷ் (வயது 15 ). நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். யோகேஷ், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடிகர் விஜய்யின் மெர்சல் படம் வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைக்க முடிவு செய்தான்.

அந்த பேனரை வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உள்ள தண்ணீர் தொட்டி சுவர் மீது வைப்பதற்காக நேற்று இரவு எடுத்து வந்தனர். சுவர் மீது ஏறியபோது திடீரென எதிர்பாராதவிதமாக தண்ணீர்தொட்டியின் சுவர் இடிந்து சிறுவன் யோகேஷ் மீது விழுந்தது. இதில் யோகேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து யோகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story