ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்-ஓ.பன்னீர் செல்வம்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்-ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 18 Oct 2017 11:24 AM IST (Updated: 18 Oct 2017 11:24 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்


சென்னை, 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்கப் படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
மீண்டும் சூடு பிடிக்கிறது

ஏற்கனவே இந்த  தொகு திக்கு தேர்தல் அறிவிக் கப்பட்டு பண விநியோகம் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இனி தேர்தல் எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல் லோரிடமும் இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால்  மீண்டும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பரபரப்பு  ஏற்பட்டுள்து. தேர்தல் களத்தை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

கடந்த முறை போட்டியிட்டு பணப்பட்டுவாடா பிரச் சினையில் சிக்கிய டி.டி.வி. தினகரன் மீண்டும் போட்டியிட போவதாக கூறி இருக் கிறார்-.
எனவே டி.டி.வி. தின கரனை எதிர்த்து எடப்பாடி பழனி சாமி அணியில் போட்டியிட போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை  டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பிரசாரம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இருந் தார். இப்போது ஓ.பன்னீர் செல்வம் உள்ளே  சென்று விட்டார். டி.டி.வி. தினகரன் வெளியே நிற்கிறார்.

எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வமும் டி.டி.வி. தின கரனுக்கு எதிராக பிரசாரம் செய்ய  போகிறார்கள். கட்சியும், முகங்களும் மாற வில்லை. காட்சி மாறி இருக்கிறது.

அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் கடந்த முறை டி.டி.வி.யை எதிர்த்து களத்தில் நின்றார். 76 வயதாகும் மதுசூதனன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 1991&ல் இதே தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா அமைச்சர வையில் அமைச்சராக பணியாற்றினார்.

50  வருடங்களுக்கும் மேலாக இந்த தொகுதியில் வசித்து வரும் மதுசூதனன் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர்.

எனவே டி.டி.வி.யை எதிர்த்து போட்டியிட தகுதி யானவர் என்று களம் இறக் கப்பட்டார்.  வயது கார ணமாக சந்துபொந்தெல்லாம் சுற்றி வர சிரமப்படுவதால் இந்த முறை அவருக்குப் பதில் புதிய வேட்பாளரை எடப்பாடி அணி தேடி வருகிறது.

மதுசூதனன் வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்படுவாரா என்ற  கேள்விக்கு  ஓ. பன்னீர் செல்வம்  பதில் அளிக்கும் போது  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Next Story