நிலவேம்புக் குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர்
நிலவேம்புக் குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். அங்கு டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. அதனால், தமிழகத்தில் 15 நாள்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும். உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் டெங்கு என்று கூறி தனியார் மருத்துவமனைகள் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், நிலவேம்புக் குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலவேம்பு நீர் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் மலட்டுத் தன்மை ஏற்படாது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.
Related Tags :
Next Story