தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஸ்டாலின் திட்டம்
மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,
”எழுச்சி பயணம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ராயப்பேட்டை ஒய் எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து தொடங்கி 180 நாட்கள் இந்த பயணம் மேற்கொள்ள உள்ளார்.நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பயணம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.
நமக்கு நாமே என்ற பெயரில் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story