மரத்தில் கார் மோதி விபத்து சென்னையை சேர்ந்த 7 பேர் பலி
மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 7 பேர் இறந்தனர்.
விருத்தாசலம்,
மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 7 பேர் இறந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கேரள மாநிலம் பத்தினந்திட்டா மாவட்டம் ஆனிக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா (32) அதே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இருவரும் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
கேரளாவில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரகாஷ், பிரியா மற்றும் சென்னையில் உள்ள இவருடைய உறவினர்கள் பிரின்ஜோஸ் (23), பிரதீப் (33), ஜோஷி (24), குட்டி (29), மிதுன் (29) ஆகியோர் ஒரு காரில் 17-ந் தேதி இரவு சென்னையில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டனர்.
காரை சென்னை கே.வி.என்.புரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (29) ஓட்டினார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரகாஷ், பிரியா, பிரதீப், ஜோஷி, குட்டி, மிதுன், டிரைவர் சிவக்குமார் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
பிரின்ஜோஸ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்த தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் இறந்த 7 பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story