டெங்கு காய்ச்சலை தடுப்போம், நலமான தமிழகத்தை உருவாக்குவோம் -முதல்-அமைச்சர் பழனிசாமி
டெங்கு காய்ச்சலை தடுப்போம், நலமான தமிழகத்தை உருவாக்குவோம் - முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும். ஏடிஸ் கொசுவை ஒழிப்போம், டெங்கு காய்ச்சலை தடுப்போம், நலமான தமிழகத்தை உருவாக்குவோம். அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை உட்பட அனைத்து வசதியுடனும் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story