மணிமுக்தா, ஆழியாறு அணைகளில் பாசனத்துக்கு நீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
விவசாயிகளுக்கு பாசனத்துக்கு மணிமுக்தா, ஆழியாறு அணைகளில் நீர் திறந்துவிடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மணிமுக்தா நதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களுக்கு பாசனத்திற்காக 22-ந் தேதி (நாளை) முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 5 ஆயிரத்து 493 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களில் வேண்டுகோளை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு 25-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story