டெங்குவுக்கு உயிரிழப்பு இல்லை என கூறியது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி


டெங்குவுக்கு உயிரிழப்பு இல்லை என கூறியது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2017 2:45 AM IST (Updated: 21 Oct 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை என்று கூறியது ஏன் என்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டார்.

பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கூறி இருந்தேன். பல்வேறு தரப்பினர் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினர்.

நான் டாக்டர் அல்ல. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதனை செய்து என்ன காய்ச்சல் என்று என்னால் தெரிவிக்க முடியாது. எந்த காய்ச்சலால் உயிரிழந்தனர் என்பதை டாக்டர்கள் தான் தெரிவிக்கவேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை என்று மாவட்ட கலெக்டர், நலப்பணிகள் இணை இயக்குனர் ஆகியோர் அளித்த அறிக்கையின்படி நான் கூறினேன்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Next Story