மெர்சல் திரைப்பட காட்சிகளை நீக்குவது முறையல்ல - நடிகர் பிரபு
மெர்சல் திரைப்பட காட்சிகளை நீக்குவது முறையல்ல என நடிகர் பிரபு கூறியுள்ளார்.
சென்னை,
விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர்.
மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டர் வழியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரபு செய்தியார்களிடம் கூறியதாவது:
தணிக்கை செய்து வெளியான படத்தில், காட்சிகளை நீக்குவது முறையல்ல. கருத்து சுதந்திரம் என்பது வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்க கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story