‘மெர்சல்’ பட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ஆதரவு


‘மெர்சல்’ பட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ஆதரவு
x
தினத்தந்தி 21 Oct 2017 7:37 PM GMT (Updated: 21 Oct 2017 7:36 PM GMT)

‘மெர்சல்’ பட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என்பது நாட்டில் உள்ள பிரச்சினைகளில் ஒன்று. முக்கியமாக தமிழகத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சினை ஆகும். அப்படி ஒரு கருந்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் குறித்து, ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இது உண்மையிலேயே வரவேற்கக்கூடிய ஒன்று தான். அவர் கூறிய கருத்தை நானும் வரவேற்கிறேன். மக்களும் வரவேற்பார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தி கருத்து தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது? ஒன்றுமே இல்லையே.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story