தான்தோன்றித்தனமாக பேசுகிறார் அமைச்சர் ஜெயக்குமார் மீது மதுசூதனன் கடும் தாக்கு
சென்னை காசிமேடு விநாயகபுரம், பவர்குப்பம், புதுமனைகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ராயபுரம்,
சென்னை காசிமேடு விநாயகபுரம், பவர்குப்பம், புதுமனைகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.
அப்போது மதுசூதனன் நிருபர்களிடம் கூறும்போது, “அரசு சார்பில் மக்கள் நலனுக்காக வழங்கப்படும் நிலவேம்பு கசாயம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தவறான கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் அரசு திட்டங்களை எதிர்க்க எதிர்ப்பணி ஒன்று இருந்தால் தான் எங்களால் சிறப்பாக மக்கள் பணி செய்ய முடியும். மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தை தடுக்க மீன்வள துறை அமைச்சர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அந்த தொகுதிவாசிதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். தற்போது கட்சி உள்ள சூழ்நிலையில் மூத்த நிர்வாகிகள் பதவிக்கு வந்தால் தன்னுடைய நிலை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சர் ஜெயக்குமார் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்” என்றார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மீனவரணி மாநில செயலாளர் நீலாங்கரை முனுசாமி, அம்மா பேரவை வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story