கட்ட பஞ்சாயத்து நடத்தி நிலத்தை அபகரிப்பவர், திருமாவளவன்” தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு
கட்ட பஞ்சாயத்து நடத்தி நிலத்தை அபகரிப்பவர் திருமாவளவன் என்றும், அவரது அலுவலக இடமும் வளைத்து போடப்பட்டது தான் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக சாடினார்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் பூங்காவில் பா.ஜ.க. சார்பில், நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூங்காவுக்கு வந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் பா.ஜ.க. மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம், ‘நடிகர் விஜய்யை வளைத்துப்போட பா.ஜ.க. நினைக்கிறது’ என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே... இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
கட்ட பஞ்சாயத்து
திருமாவளவனின் அனுபவம் தான் இப்படி அவரை பேசவைக்கிறது. ஏதாவது ஒரு இடத்தை வளைத்து போடவேண்டும் என்றால், முதலில் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவார். கட்ட பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பவர் தான், திருமாவளவன். அவர்களது அலுவலகம் உள்ள இடத்தில் இருந்து எல்லா இடங்களையுமே வளைத்து தான் போட்டுள்ளனர்.
வளைத்து போட்டதில் பழக்கம் உள்ளவர்கள், இன்றைக்கு நடிகர் விஜய்யை நாங்கள் வளைத்து போடுவதாக நினைக்கிறார். அப்படி எதுவுமே கிடையாது என்பது தான் உண்மை. அப்படி அரசியல் செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விடுதலை சிறுத்தைகளுக்கு அப்படி ஒரு அவசியம் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story